லிங்குசாமியின் சண்டக்கோழி, பீமா படங்களுக்கு வசனம் எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன். தற்போது தாம்தூம், ஏகன், சரணின் மோதி விளையாடு படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.
லிங்குசாமி கார்த்தியை வைத்து இயக்கும் புதிய படத்தில் எஸ். ராமகிருஷ்ணன் வசனம் எழுதவில்லை. அவருக்கு பதில் தித்திக்குதே படத்தின் இயக்குனர் பிருந்தாசாரதி வசனம் எழுதுகிறார்.
லிங்குசாமியின் ஆனந்தம் படத்துக்கு பிருந்தாசாரதி வசனம் எழுதியிருந்தார். அதன்பிறகு பிரிந்திருந்த இந்த கூட்டணி மீண்டும் புதிய படத்தில் ஒன்றிணைகிறது.
படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.