Publish Date: Fri, 04 Apr 2008 (18:31 IST)
Updated Date: Fri, 04 Apr 2008 (18:30 IST)
எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்! அந்தக் காட்சிக்கு விவேக்கின் இந்த டயலாக்தான் பொருத்தம். வேறொன்றுமில்லை. சிம்ரன், தமன்னா, நமிதா, நிலா என்று முதல் வரிசை நடிகைகளுடன் டூயட் பாடிய எஸ்.ஜே. சூர்யா, துணை இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். படம், நியூட்டனின் மூன்றாம் விதி!
தாய் செல்வா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. அதற்குமுன் பிரமாண்டமாக நடத்திக் கொண்டிருந்தார்கள் படத்தின் ஃபோட்டோ செஷனை. காந்தியின் கடிகாரம், ரத்தம், பேன்டேஜ் என கலவையான மேக்கப்பில் சூர்யா. எங்கே நாயகி என்று தேடினால், இன்னும் கண்டுபிடிக்கவில்லையாம். தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதில் வந்தது.
பிரபாகரின் 'வில்' படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடி தேடி அலுத்துப்போன நேரம் ஆபத்பாந்தவராக வந்து சேர்ந்தார் ஷெரீன். நியூட்டனின் மூன்றாம் விதிக்கும் அப்படியொரு மேஜிக் நிகழும் என்று காத்திருக்கிறார்கள்.