Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேனீக்களால் தப்பித்த மீரா!

Advertiesment
தேனீக்களால் தப்பித்த மீரா!
, வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (16:40 IST)
மீரா ஜாஸ்மினை கொட்டியது தேனீக்களா இல்லை அதிர்ஷ்டமா? கோடம்பாக்கத்தில் நேற்று முதல் பாப்பையா இல்மலே நடக்கும் பட்டிமன்றம் இது. விஷயம் இதுதான்.

தெலுங்குப்பட ¥ட்டிங்கில் நேற்று கலந்து கொண்டார் மீரா ஜாஸ்மின். மெகபூப் கேசன் பேட்டையிலுள்ள கோயில் ஒன்றில் படப்பிடிப்பு. படப்பிடிப்பின் பரபரப்பில் மரத்தில் இருந்த தேனீக்கள் கூடு திடீரென்ற கலைந்திருக்கிறது. கூட்டை கலைத்தவர்களை கொட்டித் தீர்த்திருக்கிறது தேனீக்கள். கூட்டத்தில் மாட்டிக்கொண்டவர் மீரா ஜாஸ்மின். தேனீக்களுக்குத் தெரியுமா இடமும் வலமும். துரத்தி துரத்திக் கொட்டியதில் துடித்துப் போனராம் மீரா ஜாஸ்மின். அவரையும் சேர்த்து அரை டஜன் பேரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் இருப்பதால், இன்று சேப்பாக்கத்தில் நடக்கும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லையென்றாலும், மீராவிடம் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. இதுதான் விஷயம். ஆனானப்பட்ட ரஜினியே உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகிறார். ஆனால் எஸ்கேப்பாகி விட்டாரே மீரா! கொட்டியது மீரா ஜாஸ்மினை என்றாலும், வலி என்னவோ எல்லோருகூகும்தான்!

Share this Story:

Follow Webdunia tamil