அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (REPL) அமெரிக்காவில் இருநூறு திரையரங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அட்லாப்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பிலும், வினியோகத்திலும் ஈடுபட்டு வரும் REPL, அமெரிக்காவில் பிக் (BIG) என்ற பெயரில் திரைப்படத்துறையில் கால் பதிக்கிறது.
நியூயார்க், நியூ ஆர்லியன்ஸ், சிகாகோ முதலான முக்கிய நகரங்களில் பிக் திரையரங்குகளை நிறுவ உள்ளது. இந்தத் திரையரங்குகளில் இந்தி திரைப்படங்களுடன் தென்னிந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும். இதற்காக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியைத் தேர்வு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்தியத் திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் அதிகம். சமீபத்தில் வெளியான இந்தித் திரைப்படம் ரேஸ். யு.எஸ். டாப் லிஸ்டில் 18ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
காய்கறியோ, கலைத்துறையோ காசு கிடைக்கும் துறைகளை எல்லாம் கையகப்படுத்தி வருகிறது ரிலையன்ஸ்.