நீண்ட தலைமுடி, சோடாபுட்டி கண்ணாடி, செயலிழந்த கை. எஸ்.ஜெ.சூர்யாவா இது? பிரபாகர் இயக்கும் வில் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாச வேடம் பார்த்து வியக்காதவர்களே இல்லை.
உயர்த்திய புருவத்தை இறக்கும் முன், நியூட்டனின் மூன்றாம் விதி படத்திற்காக, ஒட்டவெட்டிய முடியுடன் ஆச்சர்யத்தை அதிகப்படுத்துகிறார் இந்த முன்னாள் ப்ளேபாய் நடிகர்.
தாய் செல்வா இயக்கும் நியூட்டனின் மூன்றாம் விதி படத்தின் படப்பிடிப்பு வரும் எட்டாம் தேதி ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் துவங்குகிறது. அதற்காக முழு வீச்சில் தயாராகி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
இந்த இரு படங்களும் முடிந்தபிறகு தெலுங்கு புலியை பவன் கல்யாணை வைத்து இயக்குகிறாராம்.