ஒரு முடிவோடுதான் இருக்கிறார் தனுஷ். பொல்லாதவனை தொடர்ந்து படிக்காதவன்! இதுவும் ரஜினி படத்தின் பெயர். தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த கட்டுப்பாட்டின்படி, ரஜினி நடித்த படிக்காதவன் படத்தை தயாரித்த ஈஸ்வரி புரொடக்சன்ஸ் வீராச்சாமியிடமிருந்து முறைப்படி பெயரை பயன்படுத்த அனுமதி வாங்கியுள்ளனர்.
விஜயா கம்பைன்ஸ் தயாரிக்கும் இந்த புதிய படிக்காதவனில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தமன்னா. ஆனந்த தாண்டவம், அயன் இப்போது படிக்காதவன் என தமன்னாவின் கொடிதான் இப்போது உயரத்தில் பறக்கிறது.
சுராஜ் இயக்கும் இந்தப் படத்திற்குப் பிறகே, குரூப் கம்பெனி கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.