பிரபாகரன் படத்தின் பிரிண்டை ஜெமினி லேபிலிருந்து வெளியே கொண்டு வரவும், இலங்கை பட நிறுவனத்துக்கு வழங்கவும் சிட்டி சிவில் கோர்ட் நேற்று இடைக்காலத் தடை விதித்தது!
சிங்கள இயக்குனர் பெரீஷ் இயக்கியிருக்கும் பிரபாகரன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த தமிழர்களும் இழிவாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் படத்தின் பிரிண்டை ஜெமினி லேபிலிருந்து கைப்பற்றி முழுமையாக அழித்துவிட உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி, சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் தொல். திருமாவளவன்.
வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் பிரிண்டை வெளியே கொண்டுவரவும், தயாரிப்பாளருக்கு வழங்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், விளக்கம் கேட்டு ஜெமினி லேபிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.