கொத்த வரும் கழுகை போல் குருவியைப் பார்த்துப் பயப்படுகிறது கோடம்பாக்கம். நடிப்பது விஜய், இயக்குவது தரணி, இளமைக்கு த்ரிஷா. மூன்றும் சேர்ந்த குருவி மே 10 திரைக்கு வருகிறது.
ரஜினி படம் அளவுக்கு குருவிக்கும் எதிர்பார்ப்பு இருப்பதால், குருவி ரிலீசுக்கு முன்பே தங்களது படங்களை திரைக்கு கொண்டுவர துடிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து ஏப்ரல் பதினான்கின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதால்¨, ஏப்ரல் 14 படங்களை ரிலீஸ் செய்ய பலரும் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, இந்த மாதம் முழுவதும் பரவலாக படங்கள் வெளிவருகின்றன. மே 10 குருவி வெளியாகும் போது, கோடம்பாக்க ராஜபாட்டை ரொம்ப க்ளீகான இருக்கும்.