Publish Date: Wed, 02 Apr 2008 (19:30 IST)
Updated Date: Wed, 02 Apr 2008 (19:30 IST)
ராமகிருஷ்ணா படத்தில் நடித்த ஸ்ரீதேவிகாவை நினைவிருக்கிறதா? இல்லை என்றால் பாதகமில்லை. விரைவில் அவரை திரையில் பார்க்கத்தான் போகிறீர்கள்.
கலைமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் எங்கள் ஆசான் படத்தில், விஜயகாந்த் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவிகா. வாய்ப்பே இல்லாமல் இருந்தவருக்கு இது தேடிவந்த அதிர்ஷ்டம்.
ஆசானை வைத்து தமிழில் நிரந்தர ஆசனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியிலிருக்கிறார் தேவிகா. அதற்காக ஃபோட்டோசெஷன், தெரிந்தவர்களுக்கு ஃபோன் கால்ஸ் என்று தடபுடலாக காய் நகர்த்துகிறார்.
முடிவு காயா பழமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.