கல்லூரி படத்தின் மூலம் சினிமா ஒளிப்பதிவாளரானவர் செழியன். எழுத்தாளரும், சினிமா விமர்சகருமான இவர், சினிமா குறித்து பல நூல்கள் எழுதியவர். உலக சினிமா குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அதன்மூலம் கிடைத்த வாய்ப்பே கல்லூரி.
எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் தாமிராவின் ரெட்டைச்சுழி படத்துக்கும் செழியனே ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கரே செழியனை தேர்வு செய்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. இதில் கலை இயக்குனராக ஆரோக்கியராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.
மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.