கண்ணாடி அரங்கம், கலர் கலரான டிஸைன்ஸ், அதில் சிருங்காரமாய் வண்ண மயில் ஓவியம்...
பிரம்மன் படைப்பை பெயர்த்து வந்தது போல் அமைக்கப்பட்ட அரங்கில் ஆடினார்கள் அஜித்தும் நயன்தாராவும். படம் ஏகன். பாடல் எடுக்கப்பட்ட இடம் சென்னை ஏவி.எம். ஸ்டுடியோ.
ராஜு சுந்தரம் இயக்குனராக தனது முதல் படத்தை பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார். தாடி அஜித்தின் சண்டைக் காட்சிகளுக்குப் பிறகு தாடி இல்லாத க்ளீன் ஷேவ் அஜித்தின் காதல் காட்சிகள் படமாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அஜித், நயன்தாரா இடம்பெறும் பாடல் காட்சி சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலில் பூனையின் மியாவ் சத்தத்தை வித்தியாசமாகவும், பொருத்தமாகவும் பயன்படத்தியிருந்தார். படப்பிடிப்பை பார்த்த அத்தனை பேருக்கும் யுவனின் இந்த புது முயற்சி பிடித்திருந்தது.
சரி, பாடல் காட்சி?
அஜித்தும், நயன்தாராவும் ஆடியிருக்கிறார்கள், யாருக்குதான் பிடிக்காமல் போகும்!