இயக்குநர் ராஜா ஆறுமுகத்தின் 'மஞ்சள் வெயில்' படம் முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. பிரசன்னா, சந்தியா, பாலா நடிக்க 'தூண்டில்' கேமிராமேன் கவியரசுவின் ஒளிப்பதிவில் 'மஞ்சள் வெயில்' இன்னும் சில வாரங்களில் திரையரங்களில் அடிக்கும்.
முக்கோண காதல் திரில்லரான இப்படத்தில் இடம் பெறும் பாலாவின் கேரக்டர், இதுவரை ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. தூண்டில் திவ்யா கேரக்டர் மாதிரி பேசப்படவிருக்கிற இந்த கேரக்டரை பற்றி வாய் திறக்க மறுக்கிறது 'மஞ்சள் வெயில்' தரப்பு. படம் வெளியாகும் தருணத்தில் கவிதைப் போட்டி, பரிசுகள் என ஜமாய்த்திடவும் உள்ளார்களாம் மஞ்சள் வெயில்காரர்கள்.