பார்த்துக் கொள்ளாமலே காதல், பேசாமலே காதல் என்ற வரிசையில் படங்கள் வந்து ரொம்ப நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை நீக்க திரைக்கு வரப்போகிறது.'மண்ணில் இந்த காதல்'.
இதில் கதாநாயகியும், நாயகனும் கடைசி வரை தொட்டுக் கொள்ளாமலே நடித்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய் கமல் இயக்குவதோடு அல்லாமல் நாயகனாக நடிக்கவும் உள்ளார். ஜோதி கதாநாயகி புதுமுகம்.
சினிமா கனவுகளோடு காத்திருக்கும் ஒன்பது இளைஞர்கள் பிளஸ் ஒரு காதல் ஜோடிகளுக்கிடையில் ஏற்படும் நிகழ்வுகள்தான் கதை. யாஜெய் இசையில், ஜெ.ராஜேஸ்குமார் ஒளிப்பதிவில் 'மண்ணில் இந்த காதல்' இன்னும் இரண்டொரு வாரங்களில் வெள்ளித்திரையில்.