தென் ஆப்பிரிக்கப் பயணத்திற்கு ஆயத்தமாகிவிட்டார் கே.வி.ஆனந்த். சூர்யாவை வைத்து ஆனந்த் இயக்கும் 'அயன்' திரைப்படத்தை ஏவி.எம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காய் கே.வி.ஆனந்த், சூர்யா, தமனா கூட்டணி ஏப்ரல் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறது.
''நேருக்கு நேர்'' படம் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து வந்த ’சூர்யாவின் நட்பு 'அயன்' மூலம் இன்னும் பலப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்'' என்கிற இயக்குநர் ''அயனுக்காக இருபத்து மூன்று வயது இளைஞனாக நடிப்பதற்கு சூர்யா எடுத்திருக்கிற ஹோம் ஒர்க் நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒன்று. நடிப்பில் அவருக்கு இருக்கிற ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது'' என்று புகழ்ந்து தள்ளுகிறார், தனது பட நாயகனும், நண்பனுமான சூர்யாவை.