'அய்யா வழி' படித்தவர், பாமரர் என்று சகலரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து செதுக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர் அன்பழகன்.
இந்தப் படத்தில் வரும் திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆஸ்தான ஆலோசகர் கேரக்டருக்கு இயக்குநரால் தேர்வு செய்யப்பட்டவர் புலவர் புலமைப்பித்தன்.
புலவரும் ஒப்புதல் தந்து ஷூட்டிங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த இயக்குநர் அன்பழகன் இப்போது அந்த ரோலில் கவிஞர் முத்துலிங்கத்தை நடிக்க வைத்துள்ளார்.
புலவர்களுக்குள் தமது படைப்புகளில் தான் போட்டி இருக்க வேண்டுமென்பதில்லை. நடிப்பதிலும் போட்டி இருக்கும் என்பது இப்போதுதான் நமக்குப் புரிகிறது.