அறை எண் 305-ல் கடவுள், குசேலன், கந்தசாமி, சந்தோஷ் சுப்பிரமணியம், சிலம்பாட்டம், சிவா மனசுல சக்தி, மகேஷ், சரண்யா மற்றும் பலர் என்று படுபிஸியாக இருக்கும் சந்தானத்திடம் சிம்புதேவன் படத்தைத் தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பீர்களா என்றால் ''எமக்குத் தொழில் காமெடி'' என்கிறார்.
''கதைக்கான ஹீரோவாக முக்கியத்தும் பெறும் வேடங்களில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் காமெடிதான் எனது முழுநேரத் தொழில்'' என்கிற சந்தானம் கிரீடம் வைப்பதற்கு முன்பே தலையின் தகுதி பற்றி பேசுவது கேட்பதற்கு இதமாயிருக்கிறது.