நகைக்சுவை வாயிலாக நல்ல சமூக கருத்துக்களை சொல்வதில் வல்லவர் என்.எஸ்.கிருஷ்ணன். அதுபோல தன்னுடைய காமெடி டிராக்குகளிலும் சமூக சிந்தனைகளை பெருமளவில் கடைபிடித்து 'சின்னக் கலைவாணர்' பட்டம் பெற்றவர் விவேக்.
இப்போது விவேக்கின் பாணியை நகைச்சுவைப் புயல் வடிவேலும் பின்பற்றத் தொடங்கியுள்ளார். இவர் நடிக்கும் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டில்' சமூக சிந்தனைகளை தூண்டும் பஞ்ச் வசனங்கள் பேசி பட்டையை கிளப்பி உள்ளார்.
''நல்ல கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்னால் அதன் ரீச்சே அலாதிதான் போங்கள்'' என்று சிலாயிக்கும் வைகைப்புயலிடம் அடுத்ததாக எந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளீர்கள்? என்றால் ''2009 வரை காமெடியனாக மட்டும்தான் நடிக்க உள்ளேன். ''ஹீரோவாக நடிப்பதை பற்றி யோசிப்பது கூட 2009க்குப் பிறகுதான்'' என்கிறார். அது என்ன 2009 கணக்கு! புரிந்தவர்கள் சொல்லுங்கள்.