நடிகை, திரைப்படத்திலும் நடிகையாகவே வருவதைப் பார்க்க நம்மவர்களுக்கு எப்போதுமே ஒரு அலாதிப் பிரியம்! கறுப்பு வெள்ளை காலந்தொடங்கி இன்று வரை இந்த கிரேஸ் குறைந்தபாடில்லை.
பாமா விஜயம் படத்தில் - ராஜஸ்ரீ, நட்சத்திரத்தில் ஸ்ரீப்ரியா, வானமே எல்லையில் பானுப்பிரியா, பிதாமகனில் சிம்ரன் என்று ஒரு பட்டியலே தயாரிக்கலாம். அந்த வரிசையில் இப்போது சினேகாவும் இடம்பெற்றுள்ளார்.
தான் நடிக்கும் 'அங்காடித்தெரு'வில் இவருக்கு நடிகை ரோல். அது தவிர குசேலனிலும் நடிகையாகவே வந்து ஒரு பாடலுக்கு ரஜினியுடன் பட்டையைக் கிளப்பப் போகிறாராம்.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்துடன் இணைந்து புதிய படம் என்று நீள்கிறது சிநேகாவின் புரோபொஷனல் கிராஃப்.