புதுமுக இயக்குநர் ரஃபி. திருப்பத்தூர் வாசியான இவர் தனது ஆசிரியர் தொழிலோடு கோடம்பாக்கத்துக்குள் காலடி வைக்கிறார்.
கதை, திரைக்கதை, இயக்கத்தோடு கதாநாயகனாகவும் தனது படமான 'புதிய பயணத்தில்' பரிமாணங்காட்ட உள்ளார். கே.வி. மணி ஒளிப்பதிவில், பிரசாத் கணேஷ் இசையில் புதிய பயணம் படம் ஏப்ரல் 16 அன்று ஏவி.எம். ஸ்டுடியோவல் தொடங்க உள்ளது.
"கண் பார்வை தெரியாத ஒருவனின் வாழ்க்கையல் குறுக்கிடும் காதலும், அதுசார்ந்த சம்பவங்களுமே படத்தின் இழை. காதலுக்கு மகுடம் சூட்டிய படங்களின் பட்டியலில் புதிய பயணம் நிச்சயம் இடம்பெறும்" என்கிறார் கண்களில் உணர்ச்சி மின்ன...