"ஒரு இயக்குநராகப் பணிபுரிவது என்பது மிகவும் கடினமான காரியம். நடிப்பில் அப்படிப்பட்ட கஷ்டங்கள் குறைவு. தன்னுடைய கேரக்டரை மட்டும் உள்வாங்கி திறம்படச் செய்தால் போதும்.
ஆனால், இயக்கம் என்று வந்தால் 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நான் நடிக்க வந்தது ஒரு விபத்து என்றாலும், எனக்கேற்ற கேரக்டர்களை மட்டுமே செய்ததால் மட்டுமே ரசிகர்கள் இத்தகைய வரவேற்பை தந்துள்ளார்கள்" என்று ஒரு ஆய்வு மாணவரைப் போல் பேசும் சுந்தர். சி, இப்போது 6 படங்களுக்கு மேல் கதாநாயகன் வேஷங்கட்ட தயாராக உள்ளார்.
இப்படியெல்லாம் 'வீராப்பு' காட்டாம, 'சண்டை' போடாக அப்பப்போ ஒரு படம் டைரக்ட் பண்ணினா என்ன சுந்தர். சி சார்?