ஒன்பது படங்களுக்கு ஒரே நாளில் பூஜை போட்டு திரையுலகத்தை விழி விரிய வைக்கவிருக்கிறது சாய்மீரா நிறுவனம்.
ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்தப் படத்தின் பூஜை விழாவில், தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். அகத்தியன், விஜய் மில்டன், ஜே.பி. அழகர், தயாசெந்தில் என இந்தப் படங்களுக்கான இயக்குனர் பட்டியல் நீள்கிறது.
இந்த நவக்கிரக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்களில் எது உச்சத்துக்குப் போகும்? எது எப்படி ஆகும்? என்ற ஆருடத்தை இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டது கோடபாக்கத்து ஜோசியர் வட்டாரம்.