சிலந்தி - ஆதிராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தில் முன்னா கதாநாயகன். மோனிகா நாயகி வேடம் ஏற்கிறார்.
நீல்முகர்ஜி இசையமைத்து பாடல்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் உள்ளன. இசையமைப்பாளர் கார்டில் நீர்முகர்ஜியின் பெயருடன் கே. கார்த்திக் பெயரும் இடம்பெறும் என்கிற ஆச்சர்யத் தகவலையும் தருகிறது சிலந்தி வட்டாரம்.
என்ன ஏதுவென்று விசாரித்தால் பாடல்களுக்கு இசை தந்தது மட்டும்தான் நீல்முகர்ஜியாம். பின்னணி இசை சேர்ப்பு செய்யப் போவது கே. கார்த்திக்தானாம்.
என்ன காரணம்? "யாமறியேன் பராபரமே!" என்று உதடுபிதுக்குகிறது சிலந்தி வட்டாரம்.