"நம்ம படத்துக்கு என்ன பாடலை ரீ மிக்ஸ் பண்ணப் போறீங்க?" என்ற கேள்வியோடுதான் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் பேச்சை ஆரம்பிக்கிறார்களாம்.
ரீ மிக்ஸ், தயாரிப்பாளர் சாய்ஸ் என்று ஆனதால் இயக்குநரும் மண்டையை உடைத்து ஏதாவது ஒரு பாடலைப் பிடித்துப் பர்மிஷன் வாங்கி புதிய மொந்தையில் பழை கள்ளை நிரப்புகிறார்களாம்.
இதுபற்றி ஏற்கெனவே பாடகர் எஸ்.பி.பி. ஏகத்துக்கு நொந்து வெந்து 'சகிக்க முடியலை' என்ற ரேஞ்சிற்கு பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது இன்னொரு ரீ மிக்ஸ் கலாட்டா!
ராஜ்கிரண் இயக்கத்தில் 'மலைக்கள்ளன்' தயாராகிறது. இவரே நடித்து வெளிவரப்போகும் இப்படத்தில் பழைய மலைக்கள்ளன் படப்பாடல் ரீ மிக்ஸில் ரீங்கரிக்கப் போகிறது. இளையராஜா இசையில் வெளிவரப்போகும் அந்தப் பாடல்.
''எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே''