ஏப்ரல் 4ல் தனுஷின் 'யாரடி நீ மோகினி' வெளியிடப்படுவது நாம் அறிந்த செய்திதான். யாரடி நீ மோகினிக்கு அடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிப்பதாக இருந்தது.
ஆனால் அதற்கு முன்னரே மருதமலை இயக்குநர் சுராஜ் படத்தில் நடிக்க தனுஷ் முடிவெடுத்திருப்பது லேட்டஸ்ட் செய்தி. இந்தப் படத்திற்கு பின்னால்தான் வெற்றிமாறன் படம். எனவே தனுஷும் - வெற்றிமாறனும் தயாரிப்பாளர் ராஜாவிடம் அட்வான்ஸை திருப்பித் தந்துள்ளனர்.
இப்போது, இநத்க் கூட்டணி எப்போது திரும்பவரும் என்று காத்திருக்கிறார் ராமேஸ்வரம் தயாரிப்பாளர் ராஜா.
அரசியல் தேவலை போலிக்கே!