பழைய படங்களில் தலைப்பை, புதிய படத்திற்கு வைக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளரின் அனுமதி பெற வேண்டும் அல்லது அவரின் வாரிசுகள் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் ஒரு பக்கம் இருக்க பழைய படி படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.
அந்த வகையில் ஏற்கனவே சிவாஜி மூன்று வேடங்களில் நடித்து வெளி வந்த 'தெய்வமகன்' தலைப்பில் மீண்டும் ஒரு படம். இந்த புதிய தெய்வமகனை வெற்றி இயக்குகிறார். கதாநாயகன் புதுமுகம்.
நாயகி மீராஜாஸ்மின். தலைப்புதான் பழைய தலைப்பாம். கதை புத்தம் புதிய, அப்படிக்கில்லாத அசல், அசத்தல் கதையாம். தெய்வமகன் நெஞ்சில் நிறையட்டும்.