ஒரு பக்கம் சென்சார் அதிகாரிகளின் பாராட்டு, யு சர்டிபிகட், மறுபக்கம் கலைஞர் தொலைக்காட்சியில் ரிலிஸூக்கு முன்பே 'மானட மயிலாட' நிகழ்ச்சியில் முதல் பரிசை தட்டியிருக்கும் தனது படப்பாடல் என்று என். சுந்தரேஸ்வரன் சந்தோஷத்தின் எல்லையில் இருக்கிறார்.
இவர் இயக்கும் தோழா படத்தில் சென்னை-28 டீம் அப்படியே ஆஜர். உறவுகளை விட நட்புதான் சிறந்தது என்பதை சொல்வதே தோழவாம். நாயகிகளாக லக்ஷனா, சாகித்யா, ஜெனிபர், செளமியா வலம் வர இருக்கின்றனர்.
பிரேம்ஜி அமரனின் இசையில் அத்தனைப் பாடல்கைளும் அருமையாக வந்துள்ளதாம். தோழா கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று கோடம்பாக்கத்து பட்சிகள் கூவுகின்றன.