பாரதிராஜாவின் வீட்டிலிருந்து கூடிய சீக்கிரம் "என் இனிய தமிழ் மக்களே" என்ற இன்னொரு குரலை எதிர்பார்க்கலாம். ஆமாம் மனோஜ் இயக்குநர் அவதாரத்துக்கான அரிதாரம் பூசும் வேலையில் படு பிஸி.
முன்பு பம்பாய் படத்தின்போது மணிரத்னத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனோஜ் இப்போது ஷங்கரிடம் ஆஜர். தங்கமாக இருந்தாலும் உரசிப்பார்த்து வாங்குங்கிற மாதிரி இன்டர்வியூ வச்சுதான் ஷங்கர் இவரை தேர்ந்தெடுத்தாராம்.
ரோபோவுக்காக இயங்கவிருக்கும் மனோஜிடம் பேச்சுக் கொடுத்ததிற்கு, "தாஜ்மகாலில் ஹீரோ வானதல்லாம் தாண்டி இயக்குநர் ஆவதுதான் என்னோட குறிக்கோள்" என்று ஒரே போடுபோட்டார்.
பதினாறடி பாயுமா? இந்த பாரதிராஜா வீட்டு கண்ணுக்குட்டி?