Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாண்டவமாடிய தனுஸ்ரீ தத்தா!

Advertiesment
தாண்டவமாடிய தனுஸ்ரீ தத்தா!
, சனி, 29 மார்ச் 2008 (20:22 IST)
பரபரப்புக்கு பெயர்போன பாலிவுட்டில் இப்போதைய ஹாட் டாக் தனுஸ்ரீ தத்தாவின் தகராறுதான்.

இவர் நடித்துவரும் 'ஹாரன் ஓ.கே.ப்ஸீஸ்' படத்தின் சூட்டிங் வேலையில் சக நடிகர் ஓருவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரசாரமாமாறியதோடு அல்லாமல் பெண் நிருபர் ஒருவர் மானபங்க புகார் கொடுக்குமளவிற்கு வந்துள்ளது.

தனுஸ்ரீ தத்தாவுக்கும், சக நடிகருக்கும் மோதல் என்ற செய்தியறிந்து வந்தனர் பத்திரிக்கையாளர்கள். தனுஸ்ரீயையும், அவர் தந்தையையும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்க, எரிச்சலாகிப்போன தனுஸ்ரீ தரப்பு பத்திரிக்கையாளர்களுடன் மோதலில் இறங்கின.

இந்நிலையில் தத்தாவின் சிகையலங்கார நிபுணர், உதவியாளர்கள் இருவரும் தன்னை மானபங்கப் படுத்தியதாக இளம் பெண் நிருபர் போலீசில் புகார் செய்துள்ளார். தனுஸ்ரீ தரப்பு புகாரின் பேரில் பத்திரிக்கையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil