Entertainment Film Featuresorarticles 0803 28 1080328063_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் வில்லன் பிரகாஷ்ராஜ்!

Advertiesment
விஜய் வில்லன் பிரகாஷ்ராஜ்
, வெள்ளி, 28 மார்ச் 2008 (19:56 IST)
'கில்லி' என்றதும் செல்லம் ஞாபகம் வரும். அந்த செல்லத்தை 'குருவி'யில் எப்படியும் நடிக்க வைப்பது என்று முயன்றனர். ஆனால், கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி குருவியிலிருந்து நழுவினார் பிரகாஷ் ராஜ்.

இதனால் விஜய்க்கும், பிரகாஷ் ராஜுக்கும் மனக்கசப்பு என வெட்டியாக சிலர் புகை கிளப்பினர். அது வெறும் புகைச்சல் என்பது தெரியவந்துள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பிரகாஷ் ராஜ்தான் வில்லனாம். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ரவிவர்மன் கேமரா. ஹீரோயின் நயன்தாரா.

விஜய், நயன்தாரா, பிரகாஷ் ராஜ மூவரும் திருப்பாச்சி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாடலில் கும்மியடித்தது நினைவிருக்கும். அதையே முழுப் படத்திலும் செய்ய இருக்கிறார்கள். அப்போ, இன்னொரு வெற்றி உறுதி!

Share this Story:

Follow Webdunia tamil