சேலை கட்டினால்தான் பத்மப்ரியாவுக்கு அழகு. இப்படிச் சொல்லிச் சொல்லியே மாடர்ன் டிரஸ் பக்கம் திரும்பவிடாமல் செய்தது தமிழ் சினிமா. ஒருகட்டத்தில் பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்தவர், கிளாமர் ரோலுக்கு தேடி அலைந்தது கோடம்பாக்க வரலாறு.
இதோ அவர் வழியில் இன்னொருவர் நவ்யா நாயர். நவ்யாவுக்கு சாதாரணமாகவே ஹோம்லி லுக். கிளாமர் என்று எழுதிக் காட்டினாலே அவருக்கு அலர்ஜி ஆகிவிடும் என்பது இங்குள்ளவர்களின் நினைப்பு. வித்யாதரன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்கும் நவ்யா, அந்த நினைப்பை நிர்மூலமாக்கியிருக்கிறார்.
காதல் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டியிருக்கிறாராம். குறிப்பாக பாடல் காட்சி. நவ்யா காட்டியிருக்கும் நெளிவும் சுளிவும் அவரது அடுத்த வீட்டுப் பெண் இமேஜை டேமேஜ் செய்யும்.
சரி, படத்தை எப்போ ரிலீஸ் பண்றீங்க?