Publish Date: Fri, 28 Mar 2008 (19:49 IST)
Updated Date: Fri, 28 Mar 2008 (19:49 IST)
நேரடிப் படங்களுக்கு மட்டுமே டப்பிங் பேசுவது என்றொரு கொள்கையை வைத்துள்ளார் மம்முட்டி. அதேபோல், தமிழ், இந்தி மொழிகளில் நடித்தாலும் அவரே டப்பிங் பேசுவார்.
மலையாளத்தில் மம்முட்டி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ராஜமாணிக்கம். திருவனந்தபுர மலையாளத்தில் சற்று இழுத்துப்பேசி இதில் நடித்திருப்பார் மம்முட்டி. இந்த டயலாக் டெலிவரிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு.
மம்முட்டியுடன் பத்மப்ரியா, மனோஜ் கே. ஜெயன், ரஞ்சித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மாட்டுக்கார வேலன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படுகிறது.
இதில் மலையாளத்தில் பேசியதுபோல் மம்முட்டி பேசினால் நன்றாக இருக்கும் என்பது தயாரிப்பாளரின் எண்ணம். ஆனால், தனது கொள்கைப்படி டப் செய்யப்படும் தனது படங்களுக்கு வாய்ஸ் கொடுப்பதில்லை என்று மறுத்துவிட்டாராம் மம்முட்டி.