முதன் முறையாக துபாயில் வளைகுடா திரைப்பட விழா நடைபெறுகிறது. ஏப்ரல் 13 முதல் 16 வரை நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இப்போதே நூற்றுக்கணக்கில் திரைப்படங்கள் குவிந்துள்ளன.
அரபு நாடுகளில் திரைப்படத் தயாரிப்பு குறைவு. அதனை துரிதப்படுத்தும் விதமாக நடத்தப்படும் இத்திரைப்பட விழாவில் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமி§¨ட்ஸ், ஓமன், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. குறும்படங்களும் இதில் அடக்கம்.
தமிழ்ப் படங்களின் வெளிநாட்டு வருவாயில் துபாய் போன்ற வளைகுடா நாடுகளுக்கும் சிறிய பங்குண்டு. இந்த திரைப்பட விழா அந்த பங்கின் சதவீதத்தை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கலாம்!