முதல் முறையாக ஆல்பம் ஒன்றில் தோன்றுகிறார் விஜய். சென்னை கிங்ஸ் அணியை பிரபலப்படுத்தவே இந்த புது அவதாரம்!
ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான விளம்பரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எட்டு அணிகளில் ஒன்றான சென்னை கிங்ஸ், விஜயையும், நயன்தாராவையும் தங்களது விளம்பரத் தூதர்களாக நியமித்துள்ளது.
அணியை முன்னிலைப்படுத்த வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பை சென்னை கிங்ஸ் ராஜீவ்மேனனிடம் ஒப்படைத்துள்ளது. மணிசர்மா இசை. வைரமுத்து பாடல். நடிப்பவர்கள் கிரிக்கெட் நட்சத்திரங்கள்.
இந்த ஆல்பத்தில் விஜயுடன் நயன்தாராவும் சில்லென்று ஒரு ஆட்டம் போடுகிறார். கில்லி விஜயின் இந்த கிரிககெட் ஆட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.