விஷாலின் சத்யம் படத்திற்கும், பிருத்விராஜ் நடித்த மலையாள சத்யம் படத்திற்கும் கதை ரீதியாக எந்த உறவும் இல்லை. ஆனால், பெயர் ரீதியாகவும், கேரக்டர் ரீதியாகவும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது கஷ்டம்.
நாளை மலையாள சத்யம், சத்யா என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. இதில் அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடம் பிருத்வி ராஜுக்கு. இவரது ஜோடி ப்ரியாமணி. டி.வி. செய்தியாளர்.
சத்யம் படத்திலும் விஷால் அசிஸ்டெண்ட் கமிஷனர். இது பரவாயில்லை. இவரது ஜோடி நயன்தாரா. ஆச்சரியம் என்னவென்றால் ப்ரியாமணியைப் போலவே இவருக்கும் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் வேலை. தெய்வலட்சுமி என்ற இந்த கேரக்டர்தான் நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
பெயரும் ஒன்று, கதாநாயகன் வேலையும் ஒன்று, கதாநாயகியின் வேலையும் ஒன்றா?
சத்யம் வெளியானால் மட்டுமே சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.