பருவம் தப்பி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட படங்களில் ஒன்று பேராண்மை. ஹெலிகாம் கேமரா, ராட்சஸ பலூன் விளக்குகள் என ஹைடெக் கெட்டப்புகள். அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்னை திரும்பியவர்கள், மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
பேராண்மையில் ஐந்து ஹீரோயின்கள், ஐவருமே விளையாட்டு வீராங்கனைகள். ஐவரில் ஒருவராக நடிக்கிறார் அதிசயா. வட்டாரத்தில் அறிமுகமாகி, ஒதுங்க ஒரு படம் இல்லாமல் இருந்தவருக்கு பேராண்மை பேரதிர்ஷ்டம்.
மற்ற நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என்கிறது பேராண்மை படக்குழு.