விஜியின் வெள்ளித்திரை தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது!
சென்ற வாரம் நான்கு புதிய படங்கள் ரிலீஸாகியிருக்கிறது. சிங்கக்குட்டி, இன்பா, கண்ணும் கண்ணும் மற்றும் சண்டை. இதில் சண்டைக்கும், கண்ணும் கண்ணும் படத்துக்குதான் ஓரளவு நல்ல ஓபனிங்.
சென்ற வார இறுதி வசூலில் இந்த நான்குப் படங்களையும் வெள்ளித்திரை முந்திக் கொண்டுள்ளது. இதன் வசூல் ஏறக்குறைய 14 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய். இது சென்னை நகரில் மட்டும்.
இதுவரை சென்னையில் மட்டும் 67 லட்சங்கள் வசூலித்து முதலிடத்தில் உள்ளது வெள்ளித்திரை.