மோகமுள், பாரதி, பெரியார்... என முத்தாக மூன்று படங்கள் கொடுத்தவர் ஞானராஜசேகரன். நாசரை வைத்து முகம் என்ற படமும் எடுத்திருக்கிறார். எல்லாமே சீரியஸ் படங்கள்.
ஞானராஜசேகரன் என்றாலே தாடியை தடவிய படிதான் படம் பார்க்க வேண்டும் என்ற இமேஜை மாற்றுவதற்காகவே ஒருபடம் எடுக்கிறார். இது ஒரு காதல் படம்.
காதல் என்றால் சந்தியா ஞாபகம் வராமல் இருக்குமா? அவரது படத்தில் நடிக்க சந்தியாவிடம் 'கால்ஷீட்' கேட்கப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதால் சந்தியாவின் தலையசைப்புக்காக காத்திருக்கிறார் ஞானராஜசேகரன்.