வெற்றியை மட்டுமே சுவைத்த பிரியதர்ஷன் இயக்கிய 90 விழுக்காடு மலையாளப் படங்கள் சூப்பர் ஹிட்! போதும் என்ற மனமே போதிமர புத்தனுக்கு இருக்கும். ஆனால், கலைஞர்களுக்கு?
சர்வதேச அளவில் விருது வாங்க வேண்டும் என்பது ப்ரியதர்ஷனின் நெடுநாள் ஆசை. காசு கொடுத்தால் வேன் கிடைக்கும், கார் கிடைக்கும். கேன்ஸ்சும், ஆஸ்காரும் கிடைக்குமா?
அதற்காகவே எடுத்திருக்கிறார் 'காஞ்சீவரம்'. காஞ்சிபுரத்தின் ஆதிகாலப் பெயர். நெசவாளர்களின் சொர்க்கம். இன்று நரகம்.
அறுபதுகளில் வாழ்ந்த நெசவாளர் ஒருவனின் கதைதான் காஞ்சீவரம். சொந்தக்காசில் ஃபோர் பிரேம்ஸ் பேனரில் தயாரித்து இயக்கியிருக்கிறார். இணை தயாரிப்பு டி-சீரிஸ் ஆடியோ நிறுவனம்.
முக்கியமான நெசவாளர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் கலக்க, இன்னொரு தெரிந்த முகம் ஸ்ரேயா ரெட்டி. படம் முடிந்தாலும், திரைக்கு வர கொஞ்சம் காலதாமகும். அதற்கு காரணம் உலகத் திரைப்பட விழாவிற்கு ஒருசுற்று அனுப்பி விட்டே உள்ளூரில் திரையிட இருக்கிறாராம்.
தமிழன் பெருமை தரணி அறிந்தால் நல்லதுதானே!