குறுகிய கால தயாரிப்பு என்றார்கள்; நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் 'சின்ன சைஸ் சிவாஜி'யாகவே உருவாகும் போலிருக்கிறது.
குசேலன் படத்தில் முதலில் ரஜினி, பசுபதி, மீனா என்றார்கள். பிறகு வடிவேலு, நயன்தாராவை சேர்த்தனர். படப்பிடிப்பு துவங்கிய பிறகு பிரபுவும் வந்து சேர்ந்தார். கிளைமாக்ஸ் எடுக்கிற நேரம் மேலுமொரு என்ட்ரி, சினேகா!
படத்தில் ரஜினிகாந்த நடிகராக வருவதால், முன்னணி நடிகைகளுடன் அவர் ஆடுவதுபோல் ஒரு பாடலை எடுக்கிறார்கள். ஏற்கனவே உழைப்பாளியில் மூன்று நடிகைகளுடன் ரஜினியை ஆட வைத்தவர் பி.வாசு.
இப்போது குசேலனில் ஐந்து. நயன்தாரா, மீனா, மம்தா, குஷ்பு என ஏற்கனவே நான்கு பேர் தயார். ரஜினியின் ஐந்தாவது சாய்ஸ் சினேகா. உடனடியாக சினேகாவிடம் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. சினேகா சரி சொன்னால் இன்னும் இரண்டுநாளில் ஹைதராபாத்தில் ஆட்டம் துவங்கிவிடும்!