மரக்கட்டையையும் நடிக்க வைப்பவர் பாலா. ஒரே முகத்தில் தசாவதாரம் காட்டுகிறவர் கமல். இருவரும் ஒரு படத்தில் இணைந்தால்?
கொக்கிபோட்டு பேசுகிறார்கள் கோடம்பாக்கத்தில்... வேறொன்றுமில்லை 'நான் கடவுள்' படத்துக்கு பிறகு கமலை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார் பாலா என அவருக்கு நெருக்கமான வட்டாரமே தகவலை கசிய விட்டுள்ளது.
'மர்மயோகி'யை இயக்கி நடிக்க இருக்கும் கமலும் பாலாவின் ஆசைக்கு அணை போடமாட்டார். மேலுமொரு தேசிய விருது வாங்க அவருக்கும் ஆசை இருக்காதா என்று பொடி வைத்து பேசுகிறார்கள்.
பொடி உண்மையானால் பிரமாதமான படம் ரசிகர்களுக்கு கிடைக்கும். இல்லையென்றால்? சும்மா தும்மி விட்டுப் போக வேண்டியதுதான்!