போஸ்டர் இல்லை, பிரமாண்ட கட்அவுட் இல்லை, பத்திரிகையில் விளம்பரம் கூட இல்லை. ஏவி.எம்.மின் புதிய பட தொடக்க விழாவில் ஆர்ப்பாட்டம் என்று எதுவுமில்லை, எளிமையோ எளிமை!
ஏவி.எம். ஏசி ஃப்ளோரில் அயன் படத்தில் நடிக்கும் சூர்யா, தமன்னா உட்பட அத்தனை பேரும் ஆஜர். அதிகம் பேசி பொறுமையை சோதிக்காமல் ஒவ்வொருவரும் ஹைகூ அளவுக்குப் பேசி கருத்தைக் கவர்ந்தது சிறப்பு.
வைரமுத்து பேசும்போது, அயன் தலைப்புக்கு விளக்கமளித்தார். அயன் என்றால் நான்முகன் பிரம்மா. இந்தப் படத்தில் சூர்யாவின் மற்ற மூன்ற முகங்களை கே.வி. ஆனந்த் வெளிப்படுத்துவார் என்றார்.
அயனின் பாடல் கம்போசிங் தொடங்கிவிட்டது. பத்து நாட்கள் ஹாரிஸ் ஜெயராஜுடன் இருந்து பாடல்களுக்கான டியூனை தேர்வு செய்துள்ளார் கே.வி. ஆனந்த்.
மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. பிரபு முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தில் 25 வயது இளைஞனாக நடிக்கிறார் சூர்யா. உடல் மெலிந்து, மீசையில்லாமல் விழாவுக்கு வந்திருந்த அவரைப் பார்த்தபோது, அயன் கேரக்டருகூகு ஆள் தயாராகிவிட்டார் என்பது சொல்லாமலே தெரிந்தது.