Publish Date: Mon, 24 Mar 2008 (19:17 IST)
Updated Date: Mon, 24 Mar 2008 (19:17 IST)
ரோபோ படத்தன் ஒளிப்பதிவாளர் மீண்டும் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோபோ ஒளிப்பதிவாளராக முதலில் பரிசீலிக்கப்பட்ட பெயர் நீரவ்ஷா. அவர் கேட்ட சம்பளத்தில் ஆடிப் போனவர்கள் ஒளிப்பதிவாளர் திருவை ஒப்பந்தம் செய்தனர். திரு கமலின் ஹேராம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்திப் படங்களுக்கும் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
கால்ஷீட் பிரச்சினையால் திருவும் படத்திலிருந்து விலகுவார் என்கின்றன தகவல்கள். அவர் விலகினால் அடுத்து பரிசீலனையில் இருப்பவர் ஆர்.ரத்னவேலு.
இன்னும் சில நாட்களில் ரோபோவின் ஒளிப்பதிவாளர் யார் என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.