மீடியாவுக்கு முகம் காட்டாமல் தனது திருமதி தமிழ் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ராஜகுமாரன். இவர்தான் படத்தின் நாயகன். உடன் நடிப்பது கீர்த்தி சாவ்லா.
விஜய டி.ஆருக்கு சொந்தமான பங்களாவிலும், வடபழனி முருகன் கோயிலை ஒட்டியுள்ள பகுதியிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் ராஜகுமாரன். பாடல்களுக்கு வெளிநாடு செல்லும் திட்டமும் இருக்கிறது.
கீர்த்தி சாவ்லாவுக்கு உண்மையிலேயே இதில் வித்தியாசமான வேடம். இதுவரை அடுத்தவரின் மனதை திருடிக் கொண்டிருந்தவர் இதில் அடுத்தவரின் கதையை திருடும் எழுத்தாளராக நடிக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் படத்துக்கு இசையமைக்கிறார்.