ஒரு பாடலுக்கு ஆடுவது, கவர்ச்சிக்காக ஊறுகாய் கதாபாத்திரங்களில் நடிப்பது இவற்றையெல்லாம் மூட்டைகட்டி பரணுக்கு அனுப்பி விட்டதாக கூறுகிறார் மும்தாஜ். அப்படியானால் படங்களை புறக்கணிக்க முடிவு செய்து விட்டாரா?
இல்லை! நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே நடிப்பாராம். அப்படிதான் மைலா வில் நடிக்கிறேன் என்றார்.
மைலா பெயரைப் போலவே வித்தியாசமான படம். கே.எல்.பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் வேற்றுக்கிரகப் பெண்ணாக நடிக்கிறார் மும்தாஜ். இரட்டை இயக்குனர்களான ரவி ராஜா படத்தை இயக்குகின்றார்.
மைலா பெயருடன் அழகிய ராட்சஸி சன சப்- டைட்டில் போடுகிறார்கள். மும்தாஜூக்கு தகுதியான அடைமொழி.