Publish Date: Sun, 23 Mar 2008 (18:23 IST)
Updated Date: Sun, 23 Mar 2008 (18:23 IST)
செல்வராகவனுடன் ஏற்பட்ட பிரிவை ஈடுகட்டும் வேலையில் இறங்கியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. யுவன் அமைத்த இரண்டு டியூன்களை செல்வராகவன் வேண்டாம் என நிராகரித்தது யுவனை காயப்படுத்தியுள்ளது.
மேலும் தீவிரமாக உழைப்பது கலைஞர்களின் காயத்திற்கான மருந்து. யுவன் தீவிரமாக அல்ல, அதிதீவிரமாக உழைக்கிறார்.
வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தின் மீதே யுவனின் கவனம் குவிந்திருக்கிறது. சரோஜா ஆடியோவுடன் வீடியோ ஆல்பம் ஒன்றையும் வெளியிடுகிறார்கள். இதில் யுவனே தோன்றி நடிக்கிறார்.
பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்ப வேண்டும். முக்கியமாக சரோஜாவில் இடம்பெறும் நைட் கிளப் பாடல். இதனை சிங்கப்பூரில் படமாக்குகிறார்கள். இதற்காக சிங்கப்பூருக்கே சென்று டியூன் போடுகிறார் யுவன். இந்தப் பாடலில் வெளிநாட்டவர்களை பாடவைக்கும் திட்டமும் அவருக்கு இருக்கிறது.
செல்வா - யுவன் கூட்டணியின் வெற்றிடத்தை வெங்கட்பிரபுவுடன் சேர்ந்து நிரப்ப முயல்கிறார் யுவன். முயற்சி திருவினையாகட்டும்!