Publish Date: Sun, 23 Mar 2008 (18:20 IST)
Updated Date: Sun, 23 Mar 2008 (18:19 IST)
தூத்துக்குடி படத்தில் முட்டிக்கொண்ட இயக்குனர் சஞ்சய்ராமும், நடிகர் ஹரிகுமாரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். சஞ்சய்ராமின் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் ஹரிகுமார்.
கொம்புதேவன் என்பது படத்தின் பெயர். வழக்கம்போல் உண்மைச் சம்பவம்தான் கதை. சஞ்சய்ராமே பாடல்கள் எழுதுகிறார்கள். கூடவே ஒரு கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார்.
உற்சாகம் படத்துக்குப் பிறகு வாய்ப்பில்லாமல் தெலுங்கு, கன்னடம் என சுற்றியலையும் ஷெரினை கொம்பு தேவனுக்காக மீண்டும் கோடம்பாக்கம் அழைத்து வருகிறார்கள். கொம்புதேவனைத்தான் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறார் ஷெரின்.