கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி உடல் எடையை அதிகரித்து குறைக்கும் கெட்டப் பிரியர்களின் வரிசையில் சிபியும் இணைகிறார்.
லீ படத்துக்காக தாடி தலைமுடி வளர்த்து, உடல் எடையையும் கணிசமாக அதிகரித்தார் சிபி. அடுத்து இவர் நடிப்பது ஆக்சன் படம். ராஜீவ் பிரசாத் இயக்குகிறார். 'வாலி வதம்' என பெயர் வைத்திருக்கும் அந்தப் படத்தில் உடம்பை கத்தி மாதிரி ஹார்ப்பாக வைத்திருக்க வேண்டும்.
அதற்காக லீ யில் ஏற்றிய உடம்பை குறைத்தவர், ஆசையாக வளர்த்த முடியையும் ஹார்ப்பாக்கியிருக்கிறார். இந்த புதிய தோற்றமாவது அவருக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும்.