'சேவல்' படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்று திரும்பியிருக்கிறார் ஹரி. வழக்கம் போல இதுவும் அரிவாளும், அன்பும் இரண்டறக் கலந்த கதை.
பரத் இதில் பலவித கெட்டப்புகளில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க 'எல்லாம் அவன் செயல்' பாமாவை கேட்டனர். பாடல் காட்சியில் லோ ஹிப்பில் தோன்றமாட்டேன் என பாமா பின்வாங்க, லண்டன் மாடல் ஒருவருக்கு வலை வீசினர். விரால் சிக்கினாலும் ஹரிக்கு விருப்பமில்லை.
இறுதியாக தெனாவட்டு படத்தில் ஜீவாவுடன் நடித்துவரும் பூனம் பஜ்வாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சேவலுக்கு ஏற்ற கோழி கிடைத்த மகிழ்ச்சி ஹரிக்கு!