Publish Date: Sat, 22 Mar 2008 (13:53 IST)
Updated Date: Sat, 22 Mar 2008 (13:52 IST)
கேள்விக்குறியுடன்தான் இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பாலுமகேந்திராவின் விருப்பத்துக்கு இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லையாம் தபு.
அனல் காற்று படத்தில் ப்ரியாமணி முதல் நக்மா வரை பலரது பெயர்கள் அடிபட்டன. ஒரு கட்டத்தில் பாலுமகேந்திராவே கோபமாகி, எனக்குத் தெரியாததை எல்லாம் ஏன் எழுதறீங்க என பத்திரிகைகள் மீது பாயவேண்டி வந்தது.
அனல் காற்று சீரியஸ் சப்ஜெக்ட். சின்சியரான நடிகையே இதற்குத் தேவை. தபு நடித்தால் நன்றாக இருக்கும் என பாலுமகேந்திரா விரும்புகிறார். விருப்பம் முறைப்படி தபு காதுக்கும் சென்றிருக்கிறது.
வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க கெளதம் விடுத்த அழைப்பை நிராகரித்த தபு, பாலுமகேந்திராவுக்கு பச்சைக் கொடி காட்டுவாரா?