Publish Date: Fri, 21 Mar 2008 (14:52 IST)
Updated Date: Fri, 21 Mar 2008 (14:52 IST)
அரங்கில் வைத்து 50 பேர் முன்னிலையில் ஆடியோ வெளியிடுவதெல்லாம் பழைய பேஷன். இப்போதெல்லாம் சாட்டிலைட்தான். ஏதாவது ஒரு சேனலில் லைவ்வாக ஆடியோவை வெளியிட்டு ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கே வந்து விடுகிறார்கள்.
இருபத்து மூன்றாம் தேதி, சன் தொலைக்காட்சியில் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பாகிறது. படத்தைப் பற்றி, இசையைப் பற்றி படத்தில் வேலை செய்தவர்களே பேசுகிறார்கள்.
ஆடியோ வெளியீட்டைப் போலவே ஆடியோவை வாங்குகிறவர்களுக்கும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. ஒவ்வொரு ஆடியோ சி.டி.யுடன் விதவிதமான பரிசுப் பொருட்களை வழங்கப் போகிறார்களாம்.
படத்தின் பெயரில் இருக்கும் சந்தோஷம், காசு கொடுப்பவர்களுக்கும் கிடைக்கட்டும் என்றுதான் இத்தனை தாராளமும்.